×

குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு

அகமதாபாத் : குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணைத்து நடத்திய சோதனையில் சிக்கியது.

குஜராத் கடலில் இருந்து போதைப் பொருள்கள் அடிக்கடி பிடிபடும் அதே வேளையில், போதைப் பொருள்களின் அளவைக் கைப்பற்றுவதில் பாதுகாப்பு அமைப்புகள் மீண்டும் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் ஏடிஎஸ் மற்றும் கடலோர காவல்படையினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

குஜராத் கடலில் இருந்து தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏராளமான போதை பொருட்கள் சிக்கியுள்ளன. இன்று 173 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இந்தியர்கள் என்றாலும், அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருளின் மதிப்பு ரூ.60 கோடி என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 28ம் தேதி குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.

The post குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat sea ,Ahmedabad ,Indian Coast Guard ,Anti-Narcotics Unit ,Dinakaran ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...